“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர்.

நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்.

‘ Le Monde’ பத்திரிகை பிரதமரின் இந்தக் கூற்றை வெளியிட்டிருக்கிறது.

“ஒருபக்கம் ஆஸ்பத்திரிகளின் அழுத்தத்தை எதிர்கொண்டவாறு மறுபுறம் தடுப்பூசி ஏற்றலை தீவிரப்படுத்தி வருகின்றோம். ஒரு தொற்று நோய்ச் சூழ்நிலையின் மத்தியில் முகாமைத்துவம் செய்வது மிகக் கடினமானது. நாங்கள் இப்பொழுது நெருக்கடியான ஒரு மையத்தில் இருக்கிறோம்” -என்று
பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நாலாயிரம் பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட் டுள்ளனர். இதனால் மருத்துவமனை களில் பதற்றமும் அழுத்தமும் அதிகரித் துள்ளது. பாரிஸ் பிஷா (Bichat) மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் நூறு சதவீதம் நோயாளிகளால் நிறைந்து விட்டன என்று அந்த மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவர் Jean-François Timsit தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை – நெருக்கடியைத் தணிக்கும் ஒரு முயற்சியாக பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளில் இருந்து அவசர நோயாளிகள் சிலரை வேறு பிராந்தியங்களுக்கு விமானம் மற்றும் அம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் இடம் மாற்றும் பணிகள் இன்று ஆரம்பமாகி உள்ளன.

அயல் நாடுகள் சிலவற்றிலும் வைரஸ் தொற்றலை தீவிரமடைந்து வருகிறது. இத்தாலி, ஜேர்மனி உட்பட ஜரோப்பா வின் சில நாடுகள் வைரஸ் தொற்றின் ஓராண்டை நிறைவு செய்யும் சமயத்தில் அதன் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளன.


குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *