“பணத்தை எடுத்துக்கொண்டு ஓடு” சித்திரத்தின் கலைஞர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
டனிஷ் கலைஞர் யென்ஸ் ஹானிங் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது ஆல்போர்க் சித்திர அருங்காட்சியகம். காரணம் ஒக்டோபர் 2021 இல் அவர் பண நோட்டுக்களை வாங்கிக்கொண்டு அருங்காட்சியகத்துக்குச் செய்து கொடுப்பதாக உறுதிகூறியிருந்த கலைப்படைப்புக்குப் பதிலாக அந்த நோட்டுக்களை எடுத்துவிட்டார் என்பதாகும்.
ஞாயிறன்று ஜனவரி 16 ம் திகதி அவர் அருங்காட்சியகத்திலிருந்து பெற்றுக்கொண்ட 72,000 எவ்ரோ பெறுமதியான நோட்டுக்களைத் திருப்பிக் கொடுத்திருக்கவேண்டும் என்கிறது அருங்காட்சியகம். ஹானிங்கோ அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என்கிறார்.
யென்ஸ் ஹானிங்குக்குக் குறிப்பிட்ட அந்த கலைப்படைப்புக்காக 40,000 டனிஷ் குரோனர் சன்மானம் கொடுப்பதாக அருங்காட்சியகம் உறுதி கூறியிருந்தது. அந்தச் சன்மானத்தை அவருக்குக் கொடுக்கப் போவதில்லை என்று அருங்காட்சியகம் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்