கொஞ்சம் சுடு-கோப்பி கையில் புத்தகம்!
மாலை நேரம் அது!
வானம் சிவந்திருக்க,
மேகம் கலைந்திருக்க,
ஈர காற்று மெல்ல வருட,
கவி படிக்க ஆசைப்பட்டு
கையில் எடுத்தேன் புத்தகம்!
கவியின் அழகு ஒரு பக்கம்!
தமிழின் அழகோ மறுபக்கம்!
படிக்க படிக்க திகட்டாத கவிச்சாரல்,
இருப்பினும் ஏனோ
மனப்போராட்டம்…
சற்று திரும்பி பார்க்க
அருகில் அம்மா வைத்த,
எட்டு வீடு மணக்கும் காப்பி!
கொஞ்சம் காபி! கொஞ்சும் கவி!
கொஞ்சம் காபி! கொஞ்சும் கவி என சில நிமிடங்கள் சொர்க்கத்தில்….
எழுதுவது ; கவிமணி உதயகுமார்