வான் நிலவே, வா நிலவே
அருகினில் இருந்தால் அல்லிவிடுவேன் என்று ஆகாயத்தில் அமர்ந்தாயோ,
ஆசையாய் அழைக்கிறேன் வா நிலவே….
கையெட்டா தூரத்தில் இருந்து கண்கலங்க வைக்கிறாய், கண்ணில் வைத்து காத்திருப்பேன் வா நிலவே…..
மற்றதன் மேல் தாகம் தீர்ந்தாலும்,
உன்மேல் உள்ள மோகம் தீராது வா நிலவே….
மல்லிகையாய் பூத்திருக்கும் நிலவே, என் வாழ்வில் வாசம் வீச வா நிலவே….
இருள் சூழ்ந்த வானில், ஒற்றை மின்மினியாய் நீ இருக்கிறாய், என் வாழ்வில் வெளிச்சம் தர வா நிலவே…
முகில் மூடி உனை தடுக்கும் முன்,
தடையின்றி தரையிரங்கி வா நிலவே…..
விண்ணில் வீணாய் மாயம் செய்கிறாய்,மடியில் வைத்து தாலாட்டுவேன், மண்ணிலிறங்கி வா நிலவே….
இமைக்காமல் உனைக் காண்கிறேன், உயிராய் உருகுகிறேன், உடனிருக்க வா நிலவே….
உன்னைப் போலவே, என் தாய் இருக்கிறாள், அவளை கண்டு செல்லவாவது வா நிலவே…..
எழுதுவது : கவிஞர் த.திவ்ய லட்சுமி
திருப்பத்தூர்