ஆசியாவிலேயே கஞ்சாவை “சட்டபூர்வமானது,” என்று முதலாவதாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் நாடு தாய்லாந்து.
ஐரோப்பிய நாடுகள் சிலவும், அமெரிக்காவிலும் கஞ்சாவை மருத்துவப் பாவனைக்காகப் பயன்படுத்துவதை அனுமதித்திருக்கின்றன. சமீபத்தில் மால்டா குறைந்த அளவில் கஞ்சாவை வைத்திருப்பவர்களைக் கைது செய்வதில்லை என்று முடிவு செய்தது. ஆசிய நாடுகளில் தாய்லாந்தே கஞ்சாவை மருத்துவத்துக்காகப் பாவிப்பதை முதலில் அனுமதித்த நாடு. அடுத்த கட்டமாக அங்கு அப்பயிர் “சட்டபூர்வமானது,” என்றும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அனுதின் சார்ன்விரகுல் செவ்வாயன்று கஞ்சாச் செடியிலான தயாரிப்புக்கள் இனிமேல் பிரத்தியேக கட்டுப்பாட்டுக்கு உரியவை என்று கருதப்படாது என்று குறிப்பிட்டார். அந்த முடிவைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மேலும் 120 நாட்களாகும். தாய்லாந்து அரசு எடுத்திருக்கும் அந்த முடிவு தனியார் ஒருவர் தன்னிடம் கஞ்சாப் பொருட்களை எந்த அளவில் வைத்திருக்கலாம் என்றோ எந்த அளவு சட்டத்துக்கு எதிரானதோ என்று இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று நாட்டின் வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்