கஞ்சா பாவித்ததால் மருத்துவ உதவி தேடும் பிள்ளைகள் எண்ணிக்கை கனடாவில் பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

பிஸ்கட் மற்றும் இனிப்புச் சிற்றுண்டிகளில் கஞ்சாவைச் சேர்ப்பது கனடாவில் சமீப வருடங்களில் அனுமதிக்கப்பட்டது. அதையடுத்து கஞ்சாவினால் பாதிக்கப்பட்டதால் அவசர மருத்துவ உதவியை நாடும் பிள்ளைகளின் எண்ணிக்கை கனடாவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பிடத்தக்கதாக ஒன்ராரியோ மாநிலத்தில் அது முன்னரைவிட ஒன்பது மடங்கு சாதாரணமாகியிருப்பதாக மருத்துவ சேவையினரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

 கஞ்சாவை இனிப்புச் சிற்றுண்டிகளில் கலப்பது 2016 லிருந்து படிப்படியாக அனுமதிக்கப்பட்டது. அதன் பின்பு ஒன்ராரியோ மாநிலத்தில் 522 பிள்ளைகள் கஞ்சா உட்கொண்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். கஞ்சா உட்கொண்டதால் மருத்துவ உதவி நாடிய பிள்ளைகளின் மிகக் குறைந்த வயது 3 வயது 9 மாதமாக இருந்தது. எவரும் இறக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்