“நியோ-கோவ்” என்ற புதிய வைரஸ். கோவிட்டின் மற்றொரு திரிபு அல்ல

வைரஸ் திரிபு பற்றிய செய்திகளில் “திரிபு” என்று நிபுணர்கள் விளக்கம்.

வௌவால்களில் தோன்றுகின்ற கொரோனா வைரஸ் வகைகளில்புதிய ஒரு பிறழ்வைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவகை வௌவால் இனங்களில் இருந்து சில காலத்துக்கு முன்னர் கண்டுபிடித்த இந்ததிரிபுக்கு “நியோ-கோவ்” (NeoCoV) என்றுஅவர்கள் பெயரிட்டிருக்கின்றனர். இன்னமும் பூரணமாக மதிப்பாய்வு செய்யப்படாத நிலையில் புதிய திரிபு பற்றிய தகவல் இந்த வாரம் சீன மருத்துவ ஆய்வு சஞ்சிகையாகிய biorxiv இல் கட்டுரை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

உடனடியாகவே இத்தகவல் இணையத்தில் பரவியது. ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் ஒன்று தோன்றியுள்ளது என்றவாறு செய்திகள் பரவி மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒமெக்ரோனுக்குப் பிந்திய அடுத்த திரிபு இது என்று திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் இந்தியாவில் பரவின.

சீன நிபுணர்கள் அறிவித்த “நியோ – கோவ்” என்ற இந்தத் திரிபு கொரோனாவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான்.ஆனால் தற்சமயம் உலகெங்கும் பரவும்தொற்று நோயாகிய ‘கோவிட் -19’ இன்ஒரு திரிபு அல்ல. அது இன்னமும் மனிதர்களில் தொற்றவில்லை. மரணங்களும் ஏற்படவில்லை – என்று நோயியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி அது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உட்பட சில நாடுகளில் பரவிய”மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி”(Middle East respiratory syndrome)என்னும் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய புதிய திரிபு ஆகும். “மேர்ஸ்” (MERS-CoV)என்று அழைக்கப்படும் தொற்று நோய்க் குடும்ப வைரஸின் அடுத்த பிறழ்வுகளில் ஒன்றுதான் இந்த “நியோ-கோவ்” என்று விளக்கமளிக்கப்படுகிறது.

” நியோ கோவ் “குறித்து அச்சம் சீன நிபுணர்கள் அறிவித்த “நியோ – கோவ்” என்ற இந்தத் திரிபு கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான். ஆனால் தற்சமயம் உலகெங்கும் பரவும்தொற்று நோயாகிய ‘கோவிட் -19’ இன்ஒரு திரிபு அல்ல. அது இன்னமும் மனிதர்களில் தொற்றவில்லை. மரணங்களும் ஏற்படவில்லை – என்று நோயியல்நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் படி அது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உட்பட சில நாடுகளில் பரவிய”மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி”(Middle East respiratory syndrome)என்னும் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய புதிய திரிபு ஆகும். “மேர்ஸ்” (MERS-CoV)என்று அழைக்கப்படும் தொற்று நோய்க் குடும்ப வைரஸின் அடுத்த பிறழ்வுகளில்ஒன்றுதான் இந்த “நியோ-கோவ்” என்று விளக்கமளிக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.