மாற்றம்

பொறுப்பு என்பது
திடமாய் இருந்தால்
இருப்பு என்பது
கரைந்தாலும்
கவலை இல்லை….

சலிப்பு என்பது
சுற்றிக் கொண்டால்
வலிப்பு வந்ததாய்
முடங்கி விடுவாய்
வழியே யில்லை…

இனிப்பு என்பதே
நித்தமும்
தேவையென்றால்
இயல்பு வாழ்க்கை
மாற்றலாகும்…

கரைப்பு என்பது
இருப்பவரையும் தாக்கலாம்
வளர்ப்பு என்பது
இல்லாதவரையும்
உயர்த்தலாம்…

நெருப்பு என்பதாய்
சுடுவது கூட
சிறப்பூ என்பதாய்
வாழ்க்கையை
மாற்றலாம்…!!

வெண்பா பாக்யா