உடலும் உயிரும்
உடல் இல்லையே உயிருக்கு மதிப்பில்லை….
உயிர் இல்லையே உடலுக்கு மதிப்பில்லை…
ஆண் இன்றி பெண்ணுக்கு மதிப்பில்லை…
பெண்ணின்றி ஆணிற்கு மதிப்பில்லை….
ஆண் ஆளப் பிறந்தவன்
பெண் ஆட்டுவிக்கப் பிறந்தவன்….
இரண்டுமே உலகிற்கு அழகு தான்!!!
உண்மையில் சிறப்பு தான்!!!
வலிமை பெற்ற ஆண்
சிறப்பு பெற்ற பெண்
சமமடா இவ்வுலகிலே….
கருவை சுமப்பவள் பெண்-மனதில்
வலியை சுமப்பவன் ஆண்
சிவனிற்றி சக்தி இல்லை….
சக்தி இன்றி சிவன் இல்லை..போலவே
ஆண் பெண் என்று
பகுப்பு ஏதடா இன்று
புரிந்துகொள்ளடா நன்று…
எழுதுவது : கோ.மாலதி சுரேஷ்
