துணிந்து நில்

பெண்ணே துணிந்து
நில்
உன்னை வாட்டி வதைக்கும் கொடுமை தனை விரட்ட வேண்டாமா….
பெண்ணே துணிந்து நில்
தன்மானத்தை காக்க
துணிந்து நில்

தரணியை காக்க
துணிந்து நில்

புலுதி வாரி இறைக்கும் கூட்டத்தை
கூண்டோடு ஒடுக்க
துணிந்து நில்

பழிச்சொல்லை போக்க துணிந்து நில்
பாரை வென்றிட
துணிந்து நில்

பலவீனத்தை உடைத்தெரிய
துணிந்து நில்

வீனர்களை வதைக்க
துணிந்து நில்

வெற்றி பாதையில் தொடர்ந்து பீடு நடை போட துணிந்து நில்

அறிவுஜீவியாக திகழ
துணிந்து நில்

அச்சத்தை துச்சமாக
மாற்ற துணிந்து நில்

காவியம் படைக்க
துணிந்து நில்

கவிதை பெண்ணாய் மாறிட துணிந்து நில்

சாதிக்க துணிந்து நில்

சுமைகளை துறக்க
துணிந்து நில்

சுற்றத்தாரை அரவணைக்க துணிந்து நில்

காலத்தை காணிக்கை துணிந்து நில்

புதிய உருமாற்றத்தை
உருவாக்க துணிந்து நில்

சாதனை பெண்ணாய்
சாம்ராஜ்யத்தை உருவாக்க துணிந்து நில்

பெண்கள் சாதிக்க
பிறந்தவர்கள்
சாதனை படைக்கும்
வல்லவர்கள்
சங்க காலம் தொட்டு இன்று வரை போராட
துணிந்துவள் பெண்
பெண்ணே நீர் வாழீர்

எழுதுவது: இலெட்சுமி ஐயக்கண்ணு
மலேசியா