கடன்காரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகையைச் செலுத்தியதாக அறிவித்தது ரஷ்யா.

மார்ச் 16 ம் திகதி புதன் கிழமையன்று எவ்விதத் தடங்கலுமின்றித் தாம் கொடுக்கவேண்டிய 117 மில்லியன் டொலர் கடனைக் கொடுத்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. வியாழனன்று வெளியான இத்தகவலின்படி லண்டனின் சிட்டிபாங்க் கிளைக்கு அத்தொகை அனுப்பப்பட்டிருக்கிறது. ரஷ்யா மீது போடப்பட்டிருக்கும் பலவிதத் தடைகளால் இத்தொகையைச் செலுத்த ரஷ்யாவால் முடியாது என்று பரவலாகக் கணிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவின் வர்த்தக அமைச்சு வெளியிட்டிருந்த விபரங்களுக்குப் பதிலாக சிட்டிபாங்க் எவ்வித பதிலும் வெளியிடவில்லை. தம்மால் செலுத்தப்பட்டிருக்கும் அத்தொகை கடன் கொடுத்தவர்களுக்கு எப்போது சென்றடையும் என்று  தெரியாது என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்ய வர்த்தக அமைச்சு, அவ்விபரங்கள் தெரிந்தவுடன் தாம் அவற்றை வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *