வாய் பேசும் ஊமை நான்தானே
வாய் பேசும் ஊமை நான் தானே..!
என்னுள் நீ பேசும் மெளனம் வலி தானே..!
கானல் நீர் தாகம் தீர்க்க வழியேது
கண்ணா!!! =
இமைக்கமறந்த விழிகள் இங்கே!
இணைந்தே இருக்க நினைத்த கரங்கள்
பிரிந்தாலும் சேர்ந்தே நிற்கும்!
அலையடிக்கும் கடலை போல மனம்
அலைந்தே திரிகிறது என்றாலும்
அங்கே ஓர் வலி இருந்தே தணிகிறது!
நீங்காத நினைவுகள்
நிதமும் கொடுத்தவனே
தாங்காத
பாரமும் நீயே தந்தாயே!
தாங்கிடுமோ உனை நீங்கிடுமோ
பாதைகள் இல்லா தடத்தில்
நான் பதிந்தே மீண்டேன் !
பார்வைகள் இருந்தும்
நான் இருளில் நடந்தேன்…..
தேடி வர நினைக்கிறதே மனம்!
ஒன்றாய் கலந்தோம் நினைவில்!
வேறாய் வாழ்ந்தோம்
உறவில்….
காணத காட்சிகள் பல கண்முன்னே
கொண்டு வந்தாய்!!
காதலை தந்ததும் காவியம்
வடித்திட நானே துணிந்துவிட்டேன்!!!
ஒரு மனமோ மருகித் தவிக்கிறது!
உன் மனமோ எதையோ மறைக்கிறது!!!
விதியின் வசம் இங்கே தொடர்கிறது!!
விடை தெரியா கேள்வி
இரு மனம் தொடுக்கிறது ….
மழைத்துளியாய் நீ விழுந்தபின்னே
நம் அன்பு மரணிப்பது ஏது??
இணைந்தும் பிரிந்தும்
இதயம் சுமந்தும்
மனதால்
வாழ்வோம் வா இறுதிவரை ….
எழுதுவது ; செல்விமிக்கேல்
கூட்டப்புளி