பெற்றோலுக்கான நீண்ட காத்திருப்பு|வரிசையில் நின்ற அனுபவம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படும் வாழ்வை எட்டியுள்ளது. குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறையும் அதை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் “இன்று வருமோ நாளை வருமோ ” என நீண்ட காத்திருப்பு வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக பெற்றோலுக்கு சில பல மணித்தியலாங்கள் வரிசையில் காத்திருந்து பெற்றிருந்தாலும் இது 24 மணித்தியாலங்கள் தாண்டியதும் சில நெருடல்களை தந்ததனால் உங்களுடன் பகிரலாம் என்று எழுதுகிறேன்
முந்தைய நாள் இரவு கடைசியாக பேஷ்புக்கில் வந்த அப்டேட்டுகளை அடுத்து எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிய பெற்றோல் அடிக்கட்டையை எட்டியிருந்தது இதனால் நேற்று வெள்ளிகிழமை ஆட்டோவில் வேலைக்கு செல்வது என்று தீர்மானித்தும் ஆட்டோ அரைமணித்தியாலமாக கிடைக்காத காரணத்தால் வேறு வழியின்றி காரில் செல்ல வேண்டியிருந்தது. எல்லாம் நன்மைக்கே என்பது போல அலுவலகத்திற்கு (நாவல)அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான வரிசை ஒப்பீட்டளவில் மற்றைய நிரப்பு நிலையங்களை விட குறைவாக இருந்தது. அலுவலக நண்பர்கள் தாங்கள் வரிசையில் விட்டு வந்ததை சொல்லவும் நானும் சென்று இடத்தை பிடித்தபோது எனது இடம் 74. வரிசையானது lake drive இனுடாக இருந்தது பெரிய வாகன நடமாட்டங்களை அந்த பாதையினுடாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இன்று (வெள்ளி)பெற்றோல் வராது நாளை (சனி)தான் என்று உறுதியாக எரிபொருள் நிலையத்தவர்களும் சொன்னதால் காரை வரிசையில் விட்டு வேலை முடிய மாலை 6 மணிக்கு மீண்டும் இணைந்தோம்.அப்போது தான் இரவு காரிலேயே தங்குவது என்று முடிவெடுத்தோம்.
வீடு செல்வதற்கு ஆட்டோ கிடைக்காததும் மற்றய நண்பர்களின் வீடு தொலைவில் இருந்ததும் காரணம். இதற்கிடையில் நண்பகல் மதிய இடைவேளையின் போது வரிசையையும் காரையும் நோட்டம் விட வந்தபோது சிலர் பாட்டி தொடங்கி இரண்டு மூன்று ரவுண்டுகள்் ஓடியிருந்தது அவதானிக்க கூடியதாக இருந்தது. இரவு அங்கொன்றும் இங்கொன்றுமாக பல பாட்டிகள் களை கட்டியிருந்தது, டொல்கி களில் மேளமிசைத்தலும் கூட்டம் கூட்டமாக பாடல்களை பாடியும் நுளம்பு கடியிலும் இரவு ரம்மியமாக நகர்ந்து கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் இரவு பெற்றோல் பவுசர் வந்தால் கூட செல்ல மனமில்லாத நிலமை சிலருக்கு காரே ஓடமுடியாத நிலைமை. நள்ளிரவை தாண்டி நித்திரைக்கு சென்றாலும் அதிகாலை ஐந்து ஐந்தரை போல ஒவ்வொரு கார்களிலும் வெளியே வந்து ஆளுக்காள் good morning பகிர்ந்த வண்ணம் இருந்தார்கள். நண்பர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு (வெள்ளவத்தை) வந்து குளித்துவிட்டு காலை உணவையும் ரீயையும் அவர்களுக்கும் எடுத்து கொண்டு மீண்டும் 7 மணியளவில் வரிசைக்கு வந்திருந்தேன். அதற்கு முன் உணவுகளையும் தேநீர்களையும் எல்லாரும் அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து சிறந்த ஒரு சுழலை உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது நான் மட்டும் எங்கள் ஐவருக்கு தேவையான உணவை மட்டும் எடுத்து வந்தது. மேலும் “நம்பிக்கையை இழக்காதீர்கள் “என்று எழுதிய பையில் தண்ணீர்போத்தலும் பிஸ்கட் பைக்கற்றும் வைத்து அணைவருக்கும் வழங்கி இருந்தார்கள. நண்பகல் 12 மணியிலிருந்து எரிபொருள் வழங்க ஆரம்பித்திருந்தார்கள். வாகனங்களை start பண்ண முடியாதவர்களை எல்லாரும் சேர்ந்து தள்ளி உதவியும் பெற்றோல் அடித்த பின் வந்து சென்று வருகிறேன் என்று சொல்லி பிரிந்து சென்றார்கள் இந்த பெற்றோல் வரிசை தற்காலிக நண்பர்கள். நானும் 24 மணித்தியாலங்களை கடந்து மாலை 4.30 மணியளவில் நிரப்பி கொண்டு வீடு வந்தடைந்தேன்..
இது இன்றைய எமது நிலை . எதிர்காலத்தில் இன்னும் எப்படி இருக்குமோ என்ற மனப்பயம் மக்கள் மத்தியில் இருப்பதையும் அவதானிக்கமுடிகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை
எழுதுவது : சங்கீர்த்தனன், கொழும்பு