சிறீலங்காவில் ஒருவருக்கு 13 137 ரூபாய்கள் போதுமாம்- அரச அறிக்கை சொல்கிறது
சிறீலங்காவில் ஒருவர் வாழ்வதற்கு மாதமொன்றிற்கு 13137 ரூபாய்கள் போதுமென அரச அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
இது ஒரு நபரின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யப் மிகக்குறைந்த தொகை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அண்மையில் வெளியான சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
இது கடந்த மாதத்தை விட அண்ணளவாக 5.6 வீதத்தால் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தைப்பொறுத்தமட்டில் இந்த தொகையில் சிறு அதிகரிப்பைக்காட்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக நால்வர் கொண்ட குடும்பத்தில் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்ய ஏனைய மாவட்டங்களில் 52522 ரூபாய்கள் எனில் கொழும்பு மாவட்டத்தில் அது 56 676 ரூபாய்களாக இருக்கும் என குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது