கடவுச்சீட்டுகள்  கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளை
இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஏப்பிரல் மாதம் தொடக்கம் கடவுச்சீட்டை பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

அதனால் ஒவ்ழொருநாளும்  வழங்கப்படும்  கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை  தற்சமயம்  2,400 என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகிறது.
அத்துடன் ஏனைய பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களிலும் நாளும் 600  கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த எண்ணிக்கைகள் வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கப்படவேண்டிய தேவைகள் எழும் என்  வல்லுநனர்கள் மேலும் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *