தமிழக வெற்றிக் கழகம்- விஜய் கட்சிப்பெயர் இன்று அறிவிப்பு

தமிழக சினிமா நடிகர் விஜய், அரசியல் கட்சியொன்றை இன்று அறிவித்து தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழக மக்கள் இயக்கம் என இதுவரை மக்கள் பணிகளை செயற்படுத்தி வந்த அமைப்பை தமிழக வெற்றிக்கழகம் எனப்பெயரிட்டு அரசியல் கட்சியை அறிவித்துள்ளார்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தமது இலக்கு இல்லை என்றும், அந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவை அளிக்கப்போவதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி முன்னோக்கி செயற்படும் என்றும் தமிழக வெற்றிக்கழக அறிவிப்பு குறித்து வெளியிட்டிருக்கும் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *