பிரித்தானியா – இந்தியா தடையில்லா வர்த்தக கூட்டுறவு பற்றி பேச்சு
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவ்லி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் இரு நாள்கள் சிறப்புக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜேம்ஸ் இந்தியா பயணமாகிய நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த சந்திப்பில் , பிரித்தானிய – இந்திய தடையில்லா வர்த்தக உடன்பாடுகள் குறித்து முக்கியமாக உரையாடப்படுதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் உக்ரேன்-ரஷ்ஸா மோதல் விவகாரம், இந்திய- பசுபிக் விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்தியா – பிரித்தானியா 2030 செயற்றிட்ட பணிகளின் முன்னேற்றங்கள், தடைகள் குறித்த உரையாடல்கள் இடம்பெற்ற அதேவேளை இருநாடுகளுக்கும் இடையிலான வியூக ரீதியிலான கூட்டுறவோடு தடையிலாத வர்த்தக உடன்பாடுகளை விரைவில் இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னேற்றகரமாக நடந்து வருகின்றன என்றும் குறிப்பிடப்படுகிறது.