மசாசூசெட்ஸில் டிரம்ப் ஆதரவு வேட்பாளரை வீழ்த்திய மௌரா ஹீலி ஓரினச்சேர்க்கை விரும்பியாகும்.
கடந்த இரண்டு தவணைகளாக ரிபப்ளிகன் கட்சியின் கையிலிருந்த மசாசூசெட்ஸ் ஆளுனர் பதவி இம்முறை மீண்டும் டெமொகிரடிக் கட்சியின் கையில் விழுந்திருக்கிறது. அங்கே போட்டியிட்ட மௌரா ஹீலி தன்னை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் நிறுத்தப்பட்ட ஜொப் டியேலை வெற்றிபெற்றார். தான் ஓரினச்சேர்க்கையை விரும்புவதாகப் பகிரங்கமாகக் குறிப்பிடுபவர் மௌரா ஹீலி. அமெரிக்காவின் முதலாவது ஓரினச்சேர்க்கையை விரும்பும் பெண் ஆளுனர் மௌரா ஹீலி.
டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முடுக்கிவிட்டுத் தனது பலம் கட்சிக்குள் எப்படியிருக்கிறது என்பதைப் பரீட்சிக்கும் தேர்தலாகவும் நவம்பர் 08, 2022 தேர்தல் அமைந்திருக்கிறது. பழமைவாதக் கிறீஸ்தவக் கோட்பாடுகளை ஆதரிப்பவர்களைத் தனது வாக்காளர் வட்டமாகக் கொண்டிருக்கும் டிரம்ப் ஆண் – பெண் திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்குச் சமமான உரிமைகள் கொடுக்கப்படலாகாது என்று குறிப்பிடுபவராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்