மெஸ்ஸிக்குக் கிடைத்த பிஷ்த் – ஐ வாங்க ஒரு மில்லியன் டொலர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒமான் வழக்கறிஞர்.
உதைபந்தாட்டத்துக்கான உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்ரீனா வென்ற சூடு இன்னும் தணியவில்லை. அக்கிண்ணத்தை ஆர்ஜென்ரீன வீரர் பெற்றுக்கொண்டபோது அவருக்குக் கத்தாரின் அரசரால் ஒரு பிஷ்த் சால்வை போர்க்கப்பட்டது. சர்வதேசக் கால்பந்தாட்ட அமைப்பின் சட்டங்களுக்கு எதிரானது அந்த நடவடிக்கை என்று தொடர்ந்தும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த பிஷ்த் சால்வையைத் தனக்குத் தரும்படி கேட்டு ஒரு மில்லியன் டொலர்கள் விலைகொடுக்க ஒருவர் முன்வந்திருக்கிறார்.
ஷேய்க் தமீம் பின் ஹமாத் அல் தானியால் மெஸ்ஸிக்குப் போர்க்கப்பட்ட பிஷ்த் சால்வையைக் கேட்டு டுவீட்டியிருப்பவர் அஹ்மத் அர் பர்வானி என்ற ஒமான் வழக்கறிஞராகும். ஒமானிய அரசின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிலும் அங்கத்துவராக இருக்கும் அவர், “மெஸ்ஸி என் நண்பா, உலகக்கோப்பையை வென்றதுக்காக எனது வாழ்த்துக்கள். உனக்குத் தரப்பட்ட அந்த பிஷ்த்-ஐ வாங்க நான் ஒரு மில்லியன் டொலர் தரத் தயார்,” என்றூ டுவீட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்