“ஓரினச்சேர்க்கை குற்றமானதல்ல, அவ்விருப்பமுள்ளவர்களையும் தேவாலயத்துக்குள் வரவேற்கவேண்டும்”, பாப்பரசர்
கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான பாப்பரசர் செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றத்துக்குரியதல்ல, கடவுள் மனிதர்களெல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார்,” என்று குறிப்பிட்டார். அத்துடன் அவ்விருப்பத்தைக் கொண்டவர்களையும் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் வரவேற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகின் 67 நாடுகள் ஓரினச்சேர்க்கை போன்ற பெரும்பாலானோரால் அங்கீகரிக்கப்படும் உடலுறவு முறைகளைக் குற்றமானவை என்று பிரகடனம் செய்திருக்கின்றன. அவைகளில் 11 நாடுகள் அப்படியான குற்றங்களுக்கு மரண தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுகின்றன. அத்தகைய சட்டங்களைக் கொண்ட நாடுகளின் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமைப்பீடங்கள் அதை ஆதரித்தும் வருகின்றன.
ஆண் – பெண் உடலுறவு தவிர்ந்த மற்றைய உடலுறவு முறைகளைக் குற்றமாகச் சித்தரிப்பதையே “பாபம்” என்று தெளிவுபடுத்தினார் பாப்பரசர் பிரான்சீஸ். அப்படியான நிலைப்பாட்டைக் கொண்ட மேற்றிராணியார்களின் மனதுகளை மாற்றுவது அவசியம் என்றும் அதற்காக அவர்களிடையே சக மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்தார்.
கத்தோலிக்க சமயத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தேவாலயங்களுக்குள் வரவேற்கப்படவேண்டும் என்றும் அவர்களை ஒடுக்குவதும், புறந்தள்ளுவதும் பாபமானது என்றும் தெளிவுபடுத்தப்படவேண்டும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார். ஓரினச்சேர்க்கையாளர்களை ஒடுக்கும் சட்டங்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டும், அதற்காகக் கத்தோலிக்க திருச்சபை தன்னாலான முயற்சிகளைச் செய்யவேண்டும் என்று தான் விரும்புவதாக பிராசீஸ் குறிப்பிட்டார்.
ஓரினச்சேர்க்கையைப் பற்றிய விடயத்தில், குற்றம், பாபம் ஆகிய சொற்களுக்கிடையே வித்தியாசம் இருக்கவேண்டும் என்ற கருத்து பாப்பரசரால் வெளியிடப்பட்டது. அத்தகைய உடலுறவு பாபமானது ஆனால் குற்றமானது என்று குறிப்பிடலாகது என்றார் அவர். அதைச் செய்பவர்களை ஒடுக்குதலும், புறந்தள்ளுதலும் குடப் பாபமானது ஏனெனில் கடவுள் எல்லோரையும் ஒரேயளவில் மதிக்கிறார், விரும்புகிறார் என்று விளங்கப்படுத்தினார்.
சாள்ஸ் ஜெ. போமன்