சந்திராயன்-03 க்கு போட்டியாக களமிரங்கியது ரஷ்யாவின் லூனா-25
இன்றைய தினம் சந்திரனை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது ரஷ்யா.
ரஷ்யா சோயுஸ்2.1 B என்ற ரொக்கட் மூலம் அனுப்பபட்டது.இது 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும்.பின்னர் 5 முதல் 7 நாட்கள் வரையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணம் செய்து சந்திரனின் தரையில் இறங்கும் எனறும் தெரிவிக்கப்படுகிறது. நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் விண்கலமாக ரஷ்யாவின் லூனா -25 இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக 3 இடங்களை ரஷ்யாவின் விஞ்ஞானிகள் தெரிவுசெய்துள்ளனர்.
1976ம் ஆண்டு முதன் முதலாக லூனா 24என்ற விண்கலத்தை ரஷ்யா சந்திரனுக்கு அனுப்பியது .அது வெற்றிகரமாக செயற்பட்டு 176 கிராம் மண்ணுடன் அதன் கோப்ஸ்யூல் பூமிக்கு வந்தது.இதன் பிறகு 47 ஆண்டுகள் கடந்து தான் ரஷ்யா இன்றைய தினம் லூனா-25 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியுள்ளது. லூனா 25 சந்திரனின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆராய இருக்கிறது.
இதே வேளை ,ஏற்கனவே இந்தியாவால் அனுப்பபட்ட சந்திரயான்-03 ம் இதே தினத்தில் தான் நிலவில் தரையிரங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா,இந்தியா என போட்டா போட்டி என தங்களை முன்னிறுத்தி செல்கின்றமை குறிப்பிடதக்கது.