நிலவு-எழுதுவது கவிஞர் கேலோமி..!

நிலவு
நட்சத்திரங்களின்
ஊடல்.
இருள்களின்
அறப்போர்.
நிசப்தங்களின்
மீட்டல்.
இரவின்
இருளின்
நேச
பரிபாலனை.
முன்னோர்களின்
பெற்றோர்களின்
நினைவு
ஏந்தல்.
நதிகளை
நாடி
பித்ருக்களுக்கு
எள்
தண்ணீர்
கரைக்கும்
கடமை
வைபவம்.
காக்கை
குருவிகளின்
அருகாமை.
முன்னோர்களுக்கு
படைத்ததை
பறவைகள்
உண்பதை
பார்க்கும்
ஆனந்தம்.
பௌர்ணமி
ரிஷி களுக்கு
என்றால்
அமாவாசை
முன்னோர்களுக்கு.
அறிவியல்
விஞ்ஞானம்
மூடநம்பிக்கை
என்று
ஏது
வேண்டுமானாலும்
படித்தவன்
கதைத்தவன்
பகுத்தறிவாளன்
சொல்லட்டும்.
உலகத்தில்
நம்மை
படைத்த
தாய்
தந்தை
வேறு
அல்ல.
கடவுள்
வேறு
அல்ல.
முன்னோர்கள்
நினைவு
கடவுளின்
சமீபம்.
சில
ஒளி
ஆண்டுகள்
கூட
குறைய
இருந்தாலும்
இது
உணர்வுகளின்
முடிச்சு.
நேசம்.
பந்த
பாசம்.
கர்ம
தர்ம
விதி
ஆத்ம
பயணம்.
இங்கு
அறிவியல்
அறத்தை
போதிக்க
இயலாது.
போர்களை
திணித்து
உயிர்களை
அழிக்கும்.
அமாவாசை
இருளின்
லயிப்பு.
பயங்களின்
சிநேகம்.
தொழுது
பார்
அம்மாவின்
ஆசை
ஆயுள்
முழுவதும்
ஆசீர்வாதமாக
மாற
வாழ்த்துக்கள்.
பிராத்தனை கள்
பொருத்தனைகள்.
நேசத்தின்
சாம்ராஜ்ஜியத்தில்
ஒர்
அமாவாசை
ஆயிரம்
பௌர்ணமிகளுக்கு
கிட்டாத
எட்டாத
ஈடாகாத
கடவுளின்
தவம்.
உயிர்வாழிகளின்
உணர்வு
பிழிசல்.
பாச
நேச
தேனடை. கேலோமி🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *