சூரியனை நோக்கி பாய்கிறது ஆதித்யா-L1
விண்வெளித்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த வகையில் தனது பங்கையும் விண்வெளித்துறையில் வெளியிட்டு தனக்கான ஓர் இடத்தையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்தியாவும் முயற்சித்து வருகிறது. இந்த வகையில் அண்மையில் இந்தியாவால் சந்திரயான்-03 அனுப்பப்பட்டது. இதனை அனுப்பி நிலவில் தரையிறக்கி இந்தியா வெற்றியும் கண்டது. தற்போது சந்திரயான் -03 தனது செயற்பாட்டை ஆரம்பித்து செய்து வருகின்றது.
இதனிடையே சூரியனிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கமைய ஆதித்தியா-L1 என்ற செயற்கை கோளை நாளை காலை 11.50 க்கு ஶ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதீஸ்தவான் எவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி -சி57 என்ற ரொக்கட் மூலம் விண்ணை நோக்கி பாய இருக்கிறது.இது சூரியனுக்கும் புவிக்கும் இடையில் நிறுத்தப்பட்டு தனது செயற்பாடுகளை மேற்கொள்ள இருக்கின்றது.
ஆதித்யா L1ஆனது 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க உள்ளது.இதனை அடைய சுமார் 4 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.
சூரியன் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளே பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.நாசாவினால் 2017 ம் ஆண்டு அனுப்பபட்ட பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கை கோளானது 8.5மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்தப்படியாக இந்தியாவும் தனது ஆதிக்கத்தை செலுத்தவுள்ளது. சந்திரயான்-03 ல் வெற்றிக் கண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் இதிலும் வெற்றியீட்டுவார்கள்.