ஆதித்யா L1 – எழுதுவது கவிஞர் கேலோமி
அறிவின்
சூரியன்
தகிக்கும்
போது
அனல்
ஒளிக்கு
முன்னே!
சூரியன்
வழிவிடும்
கண்ணே!
ஆதித்ய
இருதய
மந்திரம்
இராமனுக்கு
அருளிய
அகத்தியர்
வாழ்க!
கண்டங்களை
அளவைகளில்
அடக்க
இயலும்
விஞ்ஞானம்
உயர்க!
பழங்கதைகள்
புராணங்கள்
வானவியல்
ஜோதிடவியல்
என்று
எதனையும்
மூடநம்பிக்கை
என்று
புறம்
தள்ளாமல்
பழையவற்றின்
கற்பனையில்
வீரியத்தில்
எழுச்சியுடன்
அடுத்தடுத்த
ஏவுகணைகள்
சீறி
பாயட்டும்.
சூரியனை
துளைத்து
வெளிவரும்
ஏவுகணைகள்
விண்
மண்
அளக்கட்டும்.
சூரிய
புத்திரன்
கர்ணனை
துளைத்த
காண்டிபம்
கிருஷ்ண
யுக்தி
நம்முடையது.
அளவைகள்
என்று
வந்த
பின்
அளப்பரியதுடன்
போராடும்
குணம்
நம்
இதிகாசத்தில்
உள்ளது.
கிருஷ்ணரை
குறி
வைத்து
தாக்கிய
அம்புகளும்
வேடர்களும்
இங்கு
உண்டு.
கருந்துளைக்குள்
எல்லா
கிரகங்களும்
பயணப்பட்டாலும்
அனுபவத்தின்
எதார்த்தத்தில்
மிஞ்சும்
அதிசயத்தை
முயற்சி
பயிற்சி
பெற்று
அளப்போம்.
பாரதத்தின்
வெற்றிகள்
கடவுளையும்
துளைக்கட்டும்.
இறைவன்
எந்த
கிரகங்களில்
வாழ்ந்தாலும்
பக்தியால்
மெய்
ஞானத்தால்
விஞ்ஞானத்தால்
சிறைபிடிப்போம்.
இந்த
பெருமை
புகழ்
உலகில்
நம்மை
தவிர
எவர்
வசம்?
ஆதித்யா L1
உலகிற்கு
புதினங்களை
விடுவிக்க
வாழ்த்துக்கள்.
இந்திய
சற்புத்திரனாக!
வாழ்க
பாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை.