காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட, சிறுமி கை மணிக்கட்டிழந்தார்..!
ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி ஒருவரின் கையின் மணிக்கட்டுடன் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.காச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமிக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புக்காக குறித்த சிறுமிக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டுள்ளது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது ‘ஊசி ஏற்றப்பட்டால் நோய் இருக்கும்’ என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமையை உணர்ந்த வைத்தியர்கள் ,அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் கடந்த 2ம் திகதி சனிக்கிழமை காலை சத்திர சிகிச்சை மூலம் கையின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொருப்பு வைத்தியர் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.