அவள் ஒரு நிலா..!
எட்டுமணி நிலவொன்னு எட்டிப்பாக்குது
அது என்வீட்டு சன்னல் வழி வந்துபோகுது காற்றாட கதவோரம் நானும் நிக்குறேன்
அது காதுக்குள்ள சேதிஒன்னு சொல்லிபோகுது மஞ்சளக மேனியோட அஞ்சலக சாவியெங்கே மாராப்பு விலகியிருக்கும்
மஞ்சதாலியில்தானிருக்கும்
நிலவுகூட வாயாட நீயில்லை
என்கூட
நட்சத்திரம் கண்ணடிக்க நாணத்தில சிவந்திருக்கேன்
நெடுநேரம் ஒத்தையில தத்தளிக்கிறேன்
அந்தப்புர மோகத்துல மூழ்கி நிக்கிறேன்
புறந்தள்ள நானுங்கூட எத்தனிக்கிறேன்
அங்கிருக்கும் புறா ரெண்டும்
ஆசையை தூண்டுது வெட்கத்தோட வாசலில
வந்து நிக்கிறேன்
மூச்சுமுட்டும் தாக்கத்துல வேர்த்து கொட்டுறேன்
மரத்தோட பாகத்துல கிளிகள் கூடுது
இந்த மனசோட பாகத்துல வெறுமையாகுது கண்ணாளனே கணநேரத்தில்
வந்துவிடு என் கவலையெல்லாம் கற்பூரமாய் எரித்திடு… ஆக்கம் ✒️
ப.கல்யாணசுந்தரம்