அமெரிக்க வைத்திய சாலைகள் முடக்கம்..!
அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் சைபர்கிரைம் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலிபோர்னியா,டென்னசி உட்பட 5 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது. இதன் போது 900 அதிமான கணணிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் மாற்று இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக சுகாதார சேவைகள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.மேலும் ரஷ்ய பிரஜைகள் 7 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.