இலங்கைசெய்திகள்

மான் கறியுடன் சிறுமி கைது..!

ஒரு வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,தேயிலை தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது மான் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி, அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமி கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மான் கறியையும் அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது விலானகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *