சமர் பேசுகிறது..!
மரணித்துப் போகும் மனித நேயம். ❗
சாகா வரம் பெற்று
உலகமெங்கும்
கலகம் செய்யும்
சமர் நான் பேசும்
சங்கதியை கேளுங்கள்❗
மனிதன் என்று
மார்தட்டிக் கொள்ளும்
உங்களுக்குள்
மமதை
பெருமை
பேராசை
இன்னும் சொல்லப்போனால்❗
போட்டி
பொறாமை
பிறர் நலன் பேனாமை
போர் குணம்
மனித வாழ்வுக்கு ஒவ்வாத
ஓராயிரம் குணாதிசயன்கள்❗
அநியாயம்
அத்துமீறல்
ஆக்கிரமிப்பு
சுரண்டல்
சுகபோக வாழ்வுக்கான
சூறையாடல்
குடியேறி
கும்மாளமிட்டுக்கொண்டிருக்க
குருடர்களாகவே
நீங்கள்
குதூகழித்துக்கொள் கிறீர்கள்❗
ஓன்று மட்டும் உண்மை
மனிதபிமானம்
மனசாட்சி
விட்டுக்கொடுப்பு
சகிப்புத் தன்மை
மனித நேயம்
ஒருவருக்கொருவர்
ஒற்றுமை
மரணிக்கும் காலமெல்லாம்
சமராகிய நான்
பிரசவித்துக் கொண்டே இருப்பேன்❗
சமர்
என் பிரசவத்தால்
உண்மை நேர்மை
நீதி நியாயம்
மனசாட்சி
மனித நேயம்
மரணித்துக் கொண்டே இருக்கும் ❗
அ. அ. நவாஸ்….. ✍️✍️✍️
வவுனியா….