காதலின் தேசிய கொடி..!
ரோஜாக்கள் மலர்களின் …ராணி & ( ராஜா ) …
காதலின் அடையாளமாக …
மனிதர்களுக்கே
ஆன காதலின்
தேசியக் கொடி …
முள்ளோடு
உன் பிறப்பு …
ஆனால் மறையாத
புன் சிரிப்பு …
அட டா …
பெண்களின்
கூந்தல் காட்டில்
குடியேறத்
தவமிருக்கும்
தவசி …
அது ஊர்வசி , ரம்பை ,
எந்தவொரு உலக அழகியே ஆனாலும்
நீ அவர்களின்
தலைக்கு மேல் ஏறி நிற்கும்
பிரபஞ்சப் பேரழகி …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052