நவரச நர்த்தகி…!
அருகியது
குறுகியது
சருகியது
மனித
மனங்கள்
மட்டுமே!
பழிப்பதும்
புகழ்வதும்
வஞ்சிப்பதும்
துஞ்சிப்பதும்
அவன்
மனமே!
சம்பிரதாயங்கள்
அது
ஒரு
போதும்
மாறுவதில்லை
பிறப்பு
இறப்பு
முதுமை
நோய்
விதி
மதி
கதி
நிறைந்த
உலகில்
கடவுளும்
சாத்தானும்
சிநேகிதர்களே!
ஒருவன்
அடிக்கட்டுமா
என்று
உத்தரவு
பெற்று
அடிப்பான்.
இன்னொருவனை
பணிந்தோ!
புகழ்ந்தோ!
தொழுதோ!
அழுதோ!
பிராத்தித்தோ!
தப்பி
பிழைக்க
கற்றுக்கொள்வது
போதிப்பது
வாதிப்பது
சாதிப்பது
வாழ்க்கை.
தோன்றி
மறையும்
சூரியன்
மாறவில்லை.
கால
தேச
வர்த்தமானங்கள்
மாறவில்லை.
நம்பிக்கை
துரோகங்களின்
விளைச்சல்
பூமி.
தாயகம்.
விதைகள்.
இங்கு
செல்வத்தின்
மதத்தின்
மொழியின்
இனத்தின்
நாடுகளின்
பெருமைகளின்
தாளகதியில்
ஆடும்
நவரச
நர்த்தகி
சம்பிரதாயம்.
வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
தாழ்ந்தாலும்
ஏசும்
ஏகபத்தினி
மனங்கள்.
சுடுவது
காய்வது
தீய்வது
மனம்
மாத்திரமே!
மற்றபடி
சம்பிரதாயங்கள்
விரல்
சொடுக்கும்
கண்
இமைக்கும்
நேரத்தில்
தோன்றி
மறையும்
அதீத
விலையுள்ள
மாத்திரைகள்.
இருப்பவனை
தொழுது
இல்லாதவனை
இகழ்ந்து
உமிழ்ந்து
எரியும்.
சாக்கடை
நாவுகள்.
அறுசுவையில்
தன்னை
இழந்த
சுயமரியாதை.
பசிகள்
நிரந்தரம்.
உணவும்
தேவை
தான்.
திருப்தி
அறியாத
சுயநல
குரங்கு.
இங்கு
பிராத்தனை யில்
புகழில்
பெருமையில்
துதியில்
இறைவனும்
மயங்கியவனே!
பார்!
மனித
சம்பிரதாயங்கள்
என்
செய்யும்.
வந்து
போகும்
விதியின்
பயணத்தின்
சம்பிராதாயம்
ஆக
சிறந்த
தொடரி.
பிறப்பு
இறப்பு
உள்ள
வரை
எரிப்பும்
புதைப்பும்
உள்ளவரை
தொடர்ந்து
வரும்
மாய
சக்கரம்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985