தென்கொரிய தேர்தலில் ஆட்சியை அபார வெற்றியால் கைப்பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டணி
தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து அதிக இடங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆளும் மக்கள் சக்தி சார்பில் இதுவரை பிரதமராக இருந்த ஹான் டக்-சூ , அவரின் பதவிக்காலம் நிறைவாகுவதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணி ஆகக்கூடிய இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 300 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தென்கொரியாவில், ஜனநாயகக் கூட்டணி189 இடங்களையும் ஆளும் பழமைவாத கட்சி கூட்டணி 111 இடங்களை மட்டுமே வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றியை அபார வெற்றியாக அறிவித்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணி , ஆளும் தரப்பின் சார்பில் ஜனாதிபதியாக இருக்கும் யூன் சுக் இயோல் நெருக்கடியை கொடுக்கும் என்றும் எதிர்வுகூறுகிறது.
அதே போலவே தேர்தலில் ஏற்பட்ட படு தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதைய பிரதமர் ஹான் டக்-சூ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவரோடு இணைந்து ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
உண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 200 இடங்களை வென்றிருந்தால் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக்கூடிய ஆதிக்கத்தை எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கக்கூடும். ஆனாலும் பெறவில்லை.
எனினும் எஞ்சியிருக்கும் 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டி ஏற்றப்படப்போகிறது என்றும் இவையனைத்தும் ஆளும் தரப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.