ஜோ பைடனின் ஈரானுக்கான பிரத்தியேக தூதுவர் ஈரானில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்ததையடுத்து யேமனுக்கான பிரத்தியேக இராஜதந்திரி மார்ரின் கிரிபித் தெஹ்ரானுக்குப் பயணமாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

https://vetrinadai.com/news/yemen-week-died-war/

தனது விஜயத்தின்  போது கிரிபித் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகளுடனும் வெளிவிவகார அமைச்சர் முஹம்மது ஜாவேத் ஸரீப்புடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என்று ஈரானின் அரசாங்க செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பேச்சுவார்த்தைகளின் முக்கியமான, ஆரம்பக்கட்டமாக யேமன் நாட்டு மக்களின் நீண்டகால வேதனைகளுக்கு முடிவுகட்டுவது பற்றி ஆலோசிக்கப்படுமென்று கிரிபித்தின் காரியதரிசியும், ஈரானிய அதிகாரிகளும் தெரிவித்திருக்கிறார்கள். தனது கடைசி அதிகார நாட்களில் டொனால்ட் டிரம்ப் யேமனின் ஹூத்தி போராளிகளைத் தீவிரவாதிகளாக அறிவித்ததை ஜோ பைடன் அரசு மாற்றிவிட முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *