கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை, அவர்கள் நோயைக் காவித் திரியவுமில்லை.
கொரோனாத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துச் சுவீடனில் நடாத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சியொன்றின்படி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆகக் குறைந்தத் ஒன்பது மாதங்களாவது எதிர்ப்புச் சக்தி நிலைத்திருக்கிறது என்று தெரியவருகிறது.
சுவீடனின் கரோலின்ஸ்கா மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்களால் தாக்கப்பட்டவர்கள் 2,000 பேரை அடிக்கடி பரிசோதித்து அவர்களிடம் நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்படது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் நீண்ட காலத்துக்கு அந்தக் கிருமிகளால் மீண்டும் தொற்றப்படவில்லையென்பது ஒரு பிரயோசனத்துக்குரிய அவதானிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவை வைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தடுப்பு மருந்து தேவையில்லை. சமூகத்தின் மற்றவர்களுக்கெல்லாம் தடுப்பு மருந்தைக் கொடுத்தபின்னர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் போதுமானது, என்கிறார்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்