சுவீடன் என்ற நாடே இல்லாத காலத்தில், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இந்தச் செப்புச் சுரங்கத்தின் கதை.
இந்தப் பிரதேசம் முழுவதுமே அடர்ந்த காடாக இருந்த காலம் அது. ஆங்காங்கே சிறு விவசாயிகளும், இடையர்களும் இங்கே வாழ்ந்தார்கள். ஆடுகளை வளர்த்த ஒரு இடையன் தான் இந்தச் செப்புச் சுரங்கத்தின் முன்னோடி என்று சொல்கிறது இந்தச் சுரங்கத்தைப் பற்றிய கதை.
தனது ஆடு ஒன்றின் கொம்பில் சிகப்பு நிறத்தால் ஏதோ பூசப்பட்டிருந்ததைக் கண்ட அந்த இடையன் அந்த ஆட்டின் பின்னால் சென்று அது எங்கே தன் தலையைத் தேய்க்கிறது என்று கண்டான். வினோதமான சிகப்பு நிறமாக அதன் தலையிலிருந்த அந்தக் கனிப்பொருட்கள் கற்களாக இருந்ததை அந்த இடையன் கண்டான்.
அதிலிருந்துதான் அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு அந்த உலோகம் பற்றித் தெரிந்தது. ஆரம்பத்தில் ஆங்காங்கே நிலமட்டத்தில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்ட செம்புக்காக இந்தப் பிராந்தியமே தோண்டப்பட ஆரம்பித்தது. அந்தச் சுரங்கம் 1970 களில் முடப்பட்டுவிட்டது.
அங்கே தான் உலாத்துகிறேன் இன்று ……
சாள்ஸ் ஜெ. போமன்