செக் குடியரசின் பெண்களின் பெயர்கள் பாரம்பரியத்துக்கிணங்க “-ová” என்று முடியவேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
செக் குடியரசின் பாரம்பரியப்படி பெண்களின் பெயர்கள் “-ová” என்று கடைசியில் முடியவேண்டும்.Junk என்ற பெயர் குடும்பத்தில் பிறக்கும் மகள் Eliška ஆக இருப்பின் அல்லது திருமணம் செய்பவர் Eliška Junková என்று தன் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். அங்கே வரும் வெளிநாட்டுப் பெண்கள் பெயரும் Angela Merkel என்பது Angela Merkelová என்று குறிப்பிடப்படும்.
பல வருடங்களாகவே செக் பெண்கள் பால் நடுத்தரமாக இருக்கும் பெயர்களே தங்களுக்கு வேண்டுமென்று குரலெழுப்பி வந்தார்கள். இந்தக் கடைசி ஒலிமாற்ற எழுத்துக்கள் செக் மொழியின் மரபுக்கு ஒவ்வாது என்று மொழி வல்லுனர்களும் சேர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள்.
நாட்டின் நீதியமைச்சரான Helena Válková இந்தப் பெயர் மாற்றம் சமூகத்திலிருக்கும் சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சின்னமாகும் என்று குறிப்பிட்டு இதை மாற்றவேண்டுமென்று வாதாடினார். பாராளுமன்றத்தில் 91 – 33 என்ற வித்தியாசத்தில் இனிமேல் செக் பெண்கள் தமது விருப்பப்படி தமது பெயரை வைத்துக்கொள்ளலாம் என்ற பிரேரணை நிறைவேறியது.
சாள்ஸ் ஜெ. போமன்