ஜெட்டா துறைமுகத்தில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன.

போதைப் பொருட்களுக்கு எதிராக லெபனானுடன் கைகோர்த்து சவூதி அரேபியா நடாத்திய அதிரடி வேட்டையொன்றில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன. செங்கடல் துறைமுகமான ஜெட்டாவுக்குக் கப்பலொன்றில் இரும்புத் தட்டுகளுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டுவரப்பட்ட அப்போதை மருந்துகளைக் கைப்பற்ற உதவிய லெபனான் சவூதி அரேபியாவின் சுங்க இலாகாவைப் பாராட்டியது.

https://vetrinadai.com/news/lebanon-saudi-import/

நீண்ட காலமாகவே சவூதி அரேபியாவுக்குள் போதைப் பொருட்களைக் கொண்டுவருவதாகக் குற்றஞ்சாட்டி லெபனானுடனான பழங்கள், காய்கறிகள் வியாபாரத்தைச் சவூதி அரேபியா நிறுத்தியிருந்தது. அதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் லெபனான் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்காக உதவுவதாக உறுதியளித்திருந்தது.

நீண்ட காலமாகவே நெருக்கமான உறவுள்ள நாடுகளான சவூதியும், லெபனானும் முறுக்கிக் கொள்ளக் காரணம் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் நடவடிக்கைகளாகும். அவ்வியக்கத்தினரின் ஈரான் சார்பை ஒடுக்கவே சவூதி அரேபிய லெபனானை நெருக்கி வருகிறது. 

குறிப்பிட்ட போதைப் பொருட்கள் லெபனான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு சிரியாவின் லடாக்கியா, லெபனானின் பெய்ரூட் துறைமுகங்களைத் தாண்டியே வந்திருக்கின்றன. அவைகளைச் சவூதி அரேபியாவில் விற்பதன் மூலம் லெபனானின் குற்றவியல் குழுக்கள் பெரும் இலாபத்தைப் பெற்று வருகின்றன. அக்குழுக்களின் பின்னால் ஹிஸ்புல்லா இயக்கம் இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *