கொரோனா இறப்புகள் சர்வதேச ரீதியில் மனிதர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.
கொவிட் 19 இறப்புக்களின் தாக்கம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மனிதர்கள் வாழக்கூடிய வயது எதிர்பார்ப்பைப் பலமாகக் குறைத்திருக்கிறது. அமெரிக்கா, சிலே மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 29 நாடுகளில் 2020 இன் இறப்புக்களின் எண்ணிக்கை விபரங்களை வைத்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் குழுவொன்று ஆராய்ந்ததிலேயே இவ்விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட 29 நாடுகளில் 27 இல் இதுவரை குறைக்கப்பட்டு வந்த வாழ்நாள் அபிவிருத்தியை கொவிட் 19 இல்லாமல் செய்திருக்கிறது. 2015 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 15 நாடுகளில் ஆண்களும், 10 நாடுகளில் பெண்களும் வாழக்கூடிய ஆண்டுகளின் எண்ணிக்கை 2020 இல் குறைந்திருக்கிறது. குறிப்பிட்ட அதே நாடுகளில் ஏற்கனவே வருடாந்தர சளிக்காய்ச்சலால் மனிதர்களின் வாழும் வயது ஏற்கனவே குறைக்கப்பட்டிருப்பதை கொவிட் 19 மேலும் மோசமாக்கியிருக்கிறது.
22 நாடுகளில் மனிதர்களின் வாழும் வயது சராசரி 6 மாதங்களால் குறைந்திருக்கிறது. அவைகளில் எட்டு நாடுகளில் பெண்களின் வாழும் வயதும் 11 ஆண்களின் வாழும் வயதும் சராசரி ஒரு ஆண்டால் குறைந்திருக்கிறது. அந்த நாடுகளில் குறிப்பிட்ட ஒரு வருட வாழ்நாள் அதிகரிப்பை எட்ட 5 – 6 வருடங்களாகியிருக்கிறது.
பொதுவாகவே குறுக்கப்பட்டிருப்பது ஆண்களின் சராசரி வாழ்நாளாகும். குறிப்பிட்ட 29 நாடுகளில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவாகும். அங்கே வாழ்நாள் சராசரியாக 2.2 வருடங்கள் குறைந்திருக்கிறது. இரண்டாவதாக லித்வேனியாவில் வாழ்நாள் 1.7 வருடத்தால் குறைந்திருக்கிறது.
சுவீடனைப் பொறுத்தவரை 2019 உடன் ஒப்பிடும்போது 2020 இல் ஆண்களின் சராசரி வாழ்நாள் 1 வருடத்தாலும் பெண்களின் வாழ்நாள் ஆறு மாதங்களினாலும் குறைந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்