டிசம்பர் மாதத்தின் பின்னர் நைஜீரியாவில் நாலாவது தடவையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள்.
ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார் மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார் 30 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென்று அவர் குறிப்பிட்டார்.
17 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் படிக்கும் அக்கல்லூரியில் சுமார் 300 மாணவர்கள் கற்கிறார்கள்.
டிசம்பர் மாதத்தின் பின்னர் நடக்கும் நாலாவது பாடசாலை மாணவர்கள் கடத்தல் இதுவாகும். கடந்த மாத இறுதியில் ஜங்கேபே நகரிலிருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டிருந்தார்கள். அவர்களை சுமார் நாலு நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்திருந்தன.
நைஜீரியாவின் ஜனாதிபதி முஹம்மது புஹாரி தனது மாநில ஆளுனர்களிடம் கடத்தல்காரருக்கு எந்தவிதத்திலும் கப்பங்கள் கொடுக்கவேண்டாமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அத்துடன் காடுகளுக்குள் ஆயுதபாணிகளாகக் காணப்படுகிறவர்கள் எவரானாலும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும்படி இராணுவத்தினருக்கு உத்தரவு கொடுத்திருக்கிறார். சாள்ஸ் ஜெ. போமன்