சர்வதேச அளவில் 150 இடத்திலிருந்த 18 வயதான எம்மா ரடுகானு அமெரிக்க டென்னிஸ் கோப்பையை வென்றார்.
டென்னிஸ் அமெரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தன்னுடன் மோதிய லெய்லா பெர்னாண்டஸை வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான எம்மா ரடுகானு. 6–4, 6–3 என்று முடிந்த அவ்விளையாட்டில் வென்றதன் மூலம் 44 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனிலிருந்து அந்த வெற்றியைப் பெற்ற பெண்ணாகிறார் எம்மா ரடுகானு.
அந்த குறைந்த வயதில் மிகப் பெருமையுள்ள ஒரு டென்னிஸ் கோப்பையை 2004 ம் ஆண்டுக்குப் பின்னர் வென்றெடுத்த பெண் என்ற பாராட்டும் எம்மாவுக்குக் கிடைத்தது. ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷப்பரோவா விம்பிள்டன் கோப்பையை வென்றபோது அவரது வயது 17 மட்டுமே.
அந்தப் போட்டிக்குள் நுழையும்போது எம்மா உலகின் பெண் டென்னிஸ் வீரர்களில் 150 இடத்திலிருந்தவர். 22 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்வர்கள் முதல் தடவையாகப் பங்குபற்றும் அந்த மோதல் சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.
லெய்லாவுடன் மோதும் அந்தக் இறுதிப் போட்டியின்போது ஓடிச்சென்று பந்தைச் சந்திக்க முயன்ற எம்மாவின் கால் சுளுக்கிக்கொண்டதால் அவருக்குக் கடும் நோவாக இருந்தது. ஆயினும், அவர் விளையாட்டை நிறுத்தவோ, விட்டுக்கொடுக்கவோ தயாராக இல்லை. தனது மருத்துவக் குழுவை அருகிலேயே வைத்துக்கொண்டு மோதலை எதிர்கொண்டார். அதுவும் சேர்ந்து அவர்களுக்கு இடையேயான 51 நிமிட மோதலை மேலும் விறுவிறுப்பாக்கியது.
சாள்ஸ் ஜெ. போமன்