ஒற்றை கொவிஷீல்ட் தடுப்பூசி கொவிட் 19 க்கெதிராக எவருக்கும் எந்தவித பாதுகாப்பும் கொடுக்கவில்லை.
சமீபத்தில் இந்தியாவில் நோயாளிகளிடையே நடாத்தபட்ட ஆராய்ச்சியின்படி ஒரேயொரு கொவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பையும் கொடுக்கவில்லை, என்கிறார்கள் டெல்லி கங்காராம் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். அதன் காரணம் இவ்வாராய்ச்சி நடாத்தப்பட்ட சமயத்தில் பெருமளவில் பரவியிருந்தது டெல்டா திரிபாகும் என்று குறிப்பிடுகிறார் ரூமா சத்விக் என்ற முக்கிய ஆராய்ச்சியாளர்.
எனவே, பிரிட்டனில் கடந்த வருடம் நடாத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி ஒரு தடுப்பூசி சுமார் 30 % பாதுகாப்புக் கொடுக்கிறது என்பது மறுபரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டுமென்கிறார்கள். அந்த ஆராய்ச்சி நடாத்தப்படும்போது பிரிட்டனில் பெருமளவில் பரவியிருந்த கொவிட் 19 டெல்டா திரிபல்ல. தற்போது பல நாடுகளிலும் பெருமளவில் டெல்டா திரிபே நோயாளிகளை ஆக்கிரமித்திருப்பதால் முன்பு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு இன்றைய நிலைமைக்குப் பொருத்தமானதல்ல என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்