Jas-gripen போர்விமானங்களை உயிரியல் எரிபொருள் மூலம் இயக்க முடியும்!

சுவீடன் தயாரிப்பான ஜாஸ் – கிரிப்பன் போர் விமானங்களில் தற்போது பாவிக்கும்  மாற்றி உயிரியல் [biofuel] எரிபொருளைப் பாவித்து இயக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 

2008 முதல் சுவீடனின் பாதுகாப்பு ஆராய்ச்சி திணைக்களம் அமெரிக்காவுடன் சேர்ந்து போரில் பாவிக்கப்படும் ஜெட் விமானங்களை உயிரியல் எரிபொருள் மூலம் இயக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருந்தது. அதன் மூலமாக 2017 ம் ஆண்டில் முதல் முறையாக ஜாஸ் கிரிப்பன் போர்விமானம் முழுக்க முழுக்க அப்படியான எரிபொருள் மூலம் வெற்றிகரமாகப் பறந்தது.

எரிபொருளை மாற்றுவதன் மூலம் சுற்றுப்புற சூழலுக்கு அதிக பங்கம் விளைவிக்காத எரிபொருளை இராணுவத் தேவைக்குப் பாவிப்பதுடன், எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருள் முடிந்துவிட்டால் பாவிப்பதற்கான எரிபொருளையும் தயார்நிலையில் வைத்திருக்கலாம். தற்போதைய நிலையில் உடனடியாக இம்மாற்றத்தைக் கொண்டுவராவிட்டாலும் விரைவில் இந்த ஆராய்ச்சியினால் பெற்றுக்கொண்ட அறிவைப் பாவித்து மாற்றங்களைச் செய்யலாம் என்கிறார்கள் பொறியியலாளர்கள். உயிரியல் எரிபொருட்கள் மலிவான விலையில் கிடைக்காததும் இந்த மாற்றத்தை உடனடியாகச் செயற்படுத்த இயலாமலிருக்கக் காரணமாகும்.

சுவீடன், தென்னாபிரிக்கா, செக் குடியரசு, தாய்லாந்து, பிரேசில், ஹங்கேரி ஆகிய நாடுகள் தற்போது ஜாஸ் கிரிப்பன் போர் விமானங்களைத் தங்கள் பாதுகாப்புக்காகப் பாவித்து வருகின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *