முஸ்லீம்கள் பாவிப்புக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து உகந்ததே!

ஒரு பகுதி முஸ்லீம்கள் மத்தியில் சில காலமாக எழுந்திருக்கும் “கொவிட் 19 தடுப்பு மருந்து இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதா, அல்லது தடுக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு அனுமதிக்கப்பட்டதே என்று பல பாகங்களிலிருந்தும் பதில் வந்தது போல ஜமாயத் அல் இஸ்லாமி ஹிந்த்தும் பதிலளித்திருக்கிறது.

இஸ்லாம் பன்றியிலிருந்து எடுத்த விடயங்களைப் பாவிப்பதைத் தடை செய்கிறது. தற்போது வெளிவந்திருக்கும் கொவிட் 19 மருந்துகளில் பன்றிக் கொழுப்புப் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. அதனால், சில முஸ்லீம்கள் அமைப்புக்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உண்மையான முஸ்லீம்கள் மறுக்கவேண்டுமென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அந்த மருந்துக்குள் பன்றியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களெதுவும் இல்லையென்று மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் பதிலளித்திருந்தாலும் அதைப் பலர் நம்பத் தயாராக இல்லை. தவிர உறைந்த நிலையில் பராமரிக்கப்படவேண்டியதால் மருந்துகளைப் பன்றிக்கொழுப்பிலிருந்து எடுத்த ஜெலடீன் என்ற பொருளில்தான் பாதுகாக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

“கொவிட் 19 தடுப்பு மருந்து பன்றிக் கொழுப்பைக் கொண்டிருப்பினும் அதைப் பாவிக்க எங்களுக்கு ஆட்சேபனையில்லை,” என்று எமிரேட்ஸ் இஸ்லாமியத் தலைமைப்பீடம்.

இதுபற்றிக் குறிப்பிட்ட எமிரேட்ஸ் நாட்டின் பத்துவா அமைப்புத் [இஸ்லாமியச் சட்டங்களைக் கவனித்து வரும்] தலைவர் ஷேக் அப்துல்லா பின் பைய்யா “வேறொரு மாற்றும் இல்லாத இந்தச் சமயத்தில் மனித உடலுக்குப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் மனித குலமே அழியும் அபாயமிருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் நாம் தடுப்பு மருந்தைப் பாவித்து எங்களையும் எங்களைச் சூழவுள்ளவர்களையும் பாதுகாக்கவேண்டும்,” என்கிறார்.

வெள்ளியன்று இந்தியாவின் மருந்துகளைப் பாவனைக்கு அனுமதிக்கும் திணைக்களமும் இரண்டு கொவிட் 19 மருந்துகளை அவசரகாலப் பாவிப்புக்கு ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் அதை மக்களுக்குக் கொடுக்கும் ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. இச்சமயத்தில் இந்தியாவிலும் முஸ்லீம்களிடையே எரிய ஆரம்பித்திருக்கும் இக்கேள்விக்கு நாட்டின் முஸ்லீம்கள் அமைப்புக்கள் “பன்றியிலான பொருட்கள் மருந்தில் இருப்பினும் தடுப்பு மருந்து பாவனைக்குரியதே,” என்று குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *