பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.
நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
போட்டிகள் நடக்கும் சமயத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்ற கட்டுப்பாட்டு விதிகளைத் தவிர கொரோனாத் தொற்றுக்களைக் கண்காணித்தல், தொற்றுக்களுக்கான பரீட்சைகள் எப்படி நடக்கும் என்பவைகளும் அதிலிருக்கின்றன. ஜப்பானுக்குள்ளே நுழையப் 14 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கும் அவை உள்ளே வரமுதல், வரும்போது, அடிக்கடி நடக்கும் தொற்றுப் பரீட்சைகள், முகக்கவசங்கள் போன்றவைகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. போட்டியில் பங்குபற்றுகிறவர்களும் அவர்களைத் தொடரும் சேவையாளர்களும் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்யலாகாது.
ஏற்கனவே 33 பக்கங்கள் விபரங்களுடனிருக்கும் கையேடு வரவிருக்கும் வாரங்களில் மேலும் விபரங்களால் இணைக்கப்படும் என்று ஜப்பான் அறிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்