புற்றுநோயுடன் ஐந்து வருடங்களாகப் போராடிய குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பின்க்ஸ் மரணமடைந்தார்.

1976 இல் மொன்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கம் வென்றவர் லியோன் ஸ்பின்க்ஸ். நீண்ட காலமாக வெவ்வேறு புற்றுநோய்களுடன் போராடி வந்த அவர் 05.02 வெள்ளியன்று 76 வயதில் மரணமடைந்தார். 

அதிக பிரபலமில்லாத லியோன் ஸ்பின்க்ஸ் 1978 இல் பிரபல குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலியுடன் உலகக் குத்துச் சண்டை வீரர் பதக்கத்துக்காக மோதி வெற்றிபெற்றவுடன் மிகவும் பேசப்பட்டார். அச்சமயத்தில் 24 வயதான லியோன் 36 வயதான முஹம்மது அலியுடன் வென்றபோது ஏழு சர்வதேசப் பந்தயங்களில் மட்டுமே கலந்துகொண்டிருந்தார். 

லியோனின் பந்தயச் சாதனைகளில் அதுதான் மிகவும் பெரியது என்று குறிப்பிடலாம். அதன்பின் ஏழே மாதங்களில் அவர் மீண்டும் முஹம்மது அலியின் சவாலை ஏற்றுக் குத்துச்சண்டையில் மோதித் தோற்றுப்போனார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *