தன்னோடு சேர்ந்து 2023 இல் SpaceX இல் நிலவுக்குப் பயணம் செய்ய வரவேற்கிறார் ஜப்பானியப் பணக்காரரொருவர்.

யுசாகு மயாஸேவா என்ற 45 ஜப்பானியப் பெரும் பணக்காரர் வித்தியாசமான விடயங்களைச் செய்து வாழ்வை அனுபவிப்பதில் விருப்பமுள்ளவர். நிலவுக்குப் போகவேண்டுமென்ற தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவிருக்கும் எலோன் மஸ்கின் நிறுவனமான  SpaceX மூலம் 2023 இல் நிலவுக்கு ஒரு வாரம் போய்வர எட்டுக் கூட்டாளிகளை அழைக்கிறார்.

நன் மனதுள்ள அவர் உலக நாடுகளிலிருக்கும் எவராயினும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அவரால் தெரிந்தெடுக்கப்படும் எட்டுப் பேருக்கும் அவரே செலவுகளைப் பொறுப்பெடுக்கவிருக்கிறார்.

2018 ம் ஆண்டிலேயே ஏலொன் மஸ்க் அறிவித்த தனியாருக்கான அந்த நிலாப் பயணத்துக்கு விண்கலத்தில் 12 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் சகல இடங்களையும் விலையைப் பற்றிக் கேட்காமல் தனது பெயரைப் பதிந்துகொண்டவர் யுசாகு மயாஸேவா ஆகும். 

“அது ஒரு தனிப்பட்ட பயணமாக இருக்கட்டுமே என்று எல்லா இடங்களையே நானே வாங்கிக்கொண்டேன்,” என்கிறார்  யுசாகு மயாஸேவா.

https://vetrinadai.com/news/starship-10-explode/

ஏலொன் மஸ்க்கின் விண்வெளிப் பயண நிறுவனம் இதுவரை செய்த பரீட்சார்த்த விண்கலச் செலுத்தல்கள் எல்லாமே வெற்றியின்றியே முடிந்திருக்கின்றன. ஆனாலும், அவர் உற்சாகத்துடன் தனது முயற்சியைத் தொடர்ந்து வருகிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *