பாலஸ்தீனாவிலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் தகிடுதத்தங்கள்.
வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் முதல் கட்டமாகத் தடுப்பு மருந்து கொடுப்பதாக உறுதிகொடுத்த பாலஸ்தீன நிர்வாகம் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், பத்திரிகையாளர்கள் சிலரைத் தடுப்பு மருந்து வரிசைக்குள் முதலேயே நுழையவிட்டிருக்கிறது.
யார் யாருக்கு அவை கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்பொன்று விபரமாக வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே ஊழல்களில் ஊறியதாகக் குற்றஞ்சாட்டப்படும் பாலஸ்தீன நிர்வாகத்தின் மீது சர்வதேச, உள்நாட்டு விமர்சனங்கள்.
பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காமல் 6,000 பேருக்கே அவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு, இஸ்ராயேல் ஆகியோரால் அவை கொடுக்கப்பட்டன. இஸ்ராயேல் தற்போது தமது நாட்டுக்குள் வந்து வேலைசெய்துவிட்டுச் செல்லும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்