உலகின் அதிக சந்தோசமான மக்களைக் கொண்ட நாடாக மீண்டும் துள்ளிக் குதிக்கிறது பின்லாந்து.
வருடாவருடம் உலக நாடுகளிடையே மக்களின் மகிழ்ச்சியைப் பற்றி கணிப்பிட்டு அதன் மூலம் நாடுகளை நிரைப்படுத்திவருகிறது World Happiness Report. என்ற அமைப்பு. அவர்களின் கணிப்புப்படி தொடர்ந்த நாலாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றிருக்கிறது பின்லாந்து.
பின்லாந்தை அடுத்த இடங்களை முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிஸ், நெதர்லாந்து ஆகியவை பெற்றிருக்கின்றன. நோர்வே, சுவீடன், லக்ஸம்பேர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகியவை ஆறாவது முதல் பத்தாவது இடங்களில் இருக்கின்றன. முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்திருக்கும் ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள ஒரேயொரு நாடு நியூசிலாந்து மட்டுமே.
ருவாண்டா, சிம்பாவ்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மகிழ்ச்சிப் பட்டியலின் கடைசி இடங்களைப் பெறுகின்றன. பதினேழாவது இடத்தில் ஐக்கிய ராச்சிய மக்களும், பத்தொன்பதாவது இடத்தில் அமெரிக்க மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 101 வது இடத்தில் பங்களாதேஷும், 105 வது இடத்தில் பாகிஸ்தானும், 129 இடத்தில் சிறீலங்காவும், 139 வது இடத்தில் இந்தியாவும், இருக்கின்றன..
கொரோனாத் தொற்றுக்காலம் மக்களின் மகிழ்ச்சியான எண்ணங்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை, ஆனால், ஏற்கனவே இருந்த அதிருப்திகளை அதிகப்படுத்தியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்