நாலு தேர்தல்களில் நாலேகால் பில்லியன் டொலர்களைச் செலவழித்த பின்னும் இஸ்ராயேலுக்கு ஒழுங்கான அரசாங்கம் கிடைக்கவில்லை.
நேற்று நடந்த தேர்தல்களின் பெரும்பாலான முடிவுகளின்படி நத்தான்யாஹூவின் கட்சி எதிர்பார்ப்புப்படி மேலும் நாலு கட்சிகளைச் சேர்ந்துக்கொண்டபின்னரும் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.
120 இடங்களைக் கொண்ட இஸ்ராயேலின் பாராளுமன்றத்தில் பாதியளவு இடங்களைக்கூட நத்தான்யாஹுவின் லிகுட் கட்சி, அதன் ஆதரவாளர்களான வலதுசாரிகளும், யூதப் பழமைவாதிகள் கட்சியும் உதவினாலும் பெரும்பான்மை இடங்களுக்கு, மூன்று அல்லது நாலு இடங்களுக்குக் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
ஒவ்வொரு தேர்தலும் இஸ்ரேலிய அரசுக்கு சுமார் 1.6 பில்லியன் டொலர்களுக்குச் செலவு வைக்கிறது. ஒரு ஸ்திரமான அரசை உண்டாக்க இரண்டு வருடங்களாக நடந்திருக்கும் நாலு தேர்தல்களுக்கும் இதுவரை நாலே கால் பில்லியன்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒரு பெரும்பான்மை அரசு கிடைக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை.
தற்போதுள்ள நிலையில் நத்தான்யாஹு இஸ்ராயேலின் அராபர்களின் கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அரசமைக்கலாம். தனது கூட்டணிக்குள் பாலஸ்தீன அராபியர்களுக்கு எதிரான கட்சிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கத்தை உண்டாக்குவது பற்றி ஏற்கனவே நத்தான்யாஹுவின் கட்சி சிந்தித்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கூட்டணியில் அராபர்களுக்கு நல்ல விளைவுகள் கிடைக்கலாமென்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்