வறிய மற்றும் வளரும் நாடுகள் பலவும் கொவிட் 19 காரணமாகத் தமது கல்விச் செலவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார்கள்.
கொவிட் 19 இன் தாக்குதலுக்கும் கல்வியறிவூட்டலுக்குமான தொடர்பைக் கவனித்ததில், வறிய நாடுகளும், கீழ்மட்ட மத்திய வருமானமுள்ள நாடுகளும் தமது வரவு, செலவுத் திட்டங்களில் கல்விக்கான செலவுகளை 65 % ஆல் குறைத்திருக்கிறார்கள். நடுத்தர வருமானமுள்ள நாடுகளோ தமது கல்விக்கான செலவுகளை 33 % ஆல் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இயற்கையைப் பாதிக்காத விதமான பொருளாதார வளர்ச்சியை அடைவது பற்றிய குறிகளுக்கான திட்டப்படிகளில் கல்வியூட்டலும் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உலக வங்கி மற்றும் உலகின் கல்வியூட்டல் பற்றிய கணிப்பை நடாத்தும் அமைப்பு ஆகியவை பெருந்தொற்றின் பக்க விளைவுகள், கல்வியின் மீது எவ்விதமான பாதிப்புக்களை உண்டாக்கியிருக்கின்றன என்பதைத் தமக்குக் கிடைத்திருக்கும் புள்ளிவிபரங்களை வைத்துக் கணித்திருக்கின்றன.
இதற்காக அடிப்படைக் கல்வி, உயர்கல்வி ஆகியவையைக் கற்றும் மாணவர்களை அதிகமாகக் கொண்ட 29 நாடுகளின் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அவை உலகின் 54 % விகித மாணவர்களை அடக்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்